Saturday, March 19, 2022

பொறுமையின் வெற்றி

 ஜப்பானிய சாமுராய் வீரன் ஒருவன் இருந்தான்.


அவன் வீட்டில் எலித் தொல்லை மிகவும் அதிகமிருந்தது.

அதிலும் குறிப்பாக..


ஒரு முரட்டு எலி அந்த வீட்டில் இருந்த உணவுப் பொருட்களைத் திருடித் தின்றபடியே இருந்தது.

வீட்டுப் பூனையால் அந்த எலியைப் பிடிக்கவே முடியவில்லை.

அத்துடன் பூனையை அந்த எலி பாய்ந்து தாக்கிக் காயப்படுத்தியது.


ஆகவே...சாமுராய் தனது அண்டை வீட்டில் இருந்த இரண்டு பூனைகளை அழைத்து வந்து முரட்டு எலியைப் பிடிக்க முயற்சி செய்தான்...இரண்டு பூனைகளும் முரட்டு எலியைத் துரத்தின.



ஆனால்...அந்த முரட்டு எலி ஆவேசத்துடன் பாய்ந்து தாக்கி அந்தப் பூனைகளையும் காயப்படுத்தியது.முடிவில் சாமுராய் தானே அந்த எலியைக் கொல்வது என முடிவு செய்து...

ஒரு தடியை எடுத்துக் கொண்டு போய்த் துரத்தினான்.

எலி அவனிடம் இருந்து தப்பி தப்பி ஒடியது.

முடிவில் குளியலறைப் பொந்துக்குள் ஒளிந்து கொண்டது.

அவன் குனிந்து அதனைத் தாக்க முயற்சித்தான்.


ஆனால்...வேறொரு வழியாக எலி வெளியே வந்து அவன் மீதும் பாய்ந்து தாக்கியது.அதில் அவனும் காயம் அடைந்தான்.


‘ஒரு முரட்டு எலியை நம்மால் பிடிக்க முடியவில்லையே, நாமெல்லாம் ஒரு சாமுராயா..?என அவமானம் அடைந்தான்.


அவனது மனவேதனையை அறிந்த ஒரு நண்பர்..."நண்பா அருகில் உள்ள மலையில் ஒரு கிழட்டு பூனை இருக்கிறது..



அந்தப் பூனையால் எந்த எலியையும் பிடித்து விட முடியும்..’’

என ஆலோசனை சொன்னார்.


சாமுராயும் வேறு வழியில்லாமல் அந்தக் கிழட்டுப் பூனையைத் தேடிப் போய் உதவி கேட்டான்.


உடனே பூனையும் சாமுராய்க்கு உதவி செய்வதாக ஒப்புக் கொண்டது.

அதன்படி மறுநாள் சாமுராய் வீட்டுக்கு அந்தக் கிழட்டு பூனை வருகை தந்தது.



பூனை இருப்பதை அறிந்த எலி..

தயங்கித் தயங்கி வெளியே வந்தது.


கிழட்டு பூனை தன் இடத்தை விட்டு நகரவேயில்லை.எலி தைரியமாக அங்குமிங்கும் ஒடுவதும் வெண்ணெய்க் கட்டிகளைத் திருடித் தின்பதுமாகயிருந்தது..


மற்ற பூனைகளாவது எலியைத் துரத்த முயற்சியாவது செய்தன.ஆனால்....இந்தக் கிழட்டுப் பூனையோ இருந்த இடத்தை விட்டு அசையவே மறுக்கிறதே என சாமுராய் அதன் மீது எரிச்சல் அடைந்தான்.


ஒருநாள் முழுவதும் அந்தப் பூனை அசையமல் அப்படியே இருந்தது

மறுநாள்....வழக்கம் போல எலி வளையை விட்டு வெளியே வந்தது.


சமையலறையில் போய் இனிப்பு உருண்டைகளை ஆசையாக தின்று விட்டு மெதுவாக திரும்பியது.


அடுத்த நொடி திடீரென பாய்ந்த அந்த கிழட்டு பூனை ஒரே அடியில் அந்த எலியைப் பிடித்து கடித்து கொன்று போட்டது.



*சாமுராய் அதை எதிர் பார்க்கவேயில்லை.*


இவ்வளவு பெரிய முரட்டு எலியை ஒரே அடியில் எப்படி அந்தக் கிழட்டு பூனை வீழ்த்தியது என வியப்படைந்தான்.


இந்தச் செய்தியை அறிந்து கொண்ட பூனைகளெல்லாம் ஒன்றுகூடி,...


"எப்படி இந்த முரட்டுஎலியைக் கொன்றாய்?

இதில் என்ன சூட்சுமம உள்ளது....?’’எனக் கேட்டன.


"ஒரு சூட்சுமமும் இல்லை.*நான் பொறுமையாக காத்திருந்தேன்.*

நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை அந்த எலி நன்றாக அறிந்திருந்தது.


ஆகவே..,அது தன்னைத் தற்காத்துக் கொள்ளப் பழகியிருந்தது.


நான் நிதானமாக, பொறுமையாக காத்துக் கிடந்த போது அது என்னைச் செயலற்றவன் என நினைத்துக் கொண்டது.


ஆயுதத்தை விட பல மடங்கு வலிமையானது நிதானம்.


எதிரி நாம் செய்யப் போவதை ஊகிக்க முடிந்தால் அது நமது பலவீனம்.


*"வலிமையானவன் தனது சரியான சந்தர்ப்பத்துக்காக காத்துக்கொண்டு தான் இருப்பான்!’’* என்றது அந்த கிழட்டு பூனை.


காத்திருப்பது முட்டாள்தனமில்லை என அந்தப் பூனை உணர்ந்திருந்தது.





கதை கரு ;     

                         சிக்கலிலும்.......சிக்னலிலும்........சிறுது பொறுமையாக இருந்தால் போதும் வழி தானாக கிடைத்துவிடும்  ......! 

SUNDAR PICHAI (THE PADMA HERO#2022)


                              SUNDAR PICHAI (THE PADMA HERO #2022)    

Sundar pichai was born june 10,1972 in madurai ,India.he works at a american business executives.He is the chief executive  officer  (CEO)of Alphabet Inc ,and its subsidiary GOOGLE .

              
                                 

parents:

         
lakshmi & regunatha pichai

   His mother ,lakshmi,was a stenographer,and his father,regunatha pichai,was an electrical engineer at GEC,the British conglomerate.His father also manufacturing plant that produced  electrical components.






Education:

                           
VANA VANI SCHOOL
(IIT Madras)

   Sundar completed schooling  in Jawahar vidyalaya senior secondary school in ashok nagar,chennai completed the class XII from vana vani school at  IIT Madras.he finished his degree from IIT  Kharagpur in metallurgical engineering and is distinguished alumnus   from that institution.He holds on M.S from stanford university in materials science and engineering,and an  MBA  from the Wharton school of university of pennsylvania.




LIFE PARTNER:

                 
sundar pichai & anjali pichai

 Pichai is married to anjali pichai and has two children.
           







Career:

                   

   
pichai worked in engineering and product management at applied materials  and in management consulting  at Mckinsey & company.pichai joined GOOGLE in 2004.





In december 2019 pichai became the  CEO of Alphabet Inc.






AWARDS:

         

   In 2022 pichai received the Padma Bhushan  from the Government of India,its third-highest civilian  award.








👍WEAR YOUR FAILURE AS A BADGE OF HONOUR😇😊  

                                                               - SUNDAR PICHAI(CEO OF GOOGLE)

 

FOR OUR  BEST WISHES TO YOU THE PADMA HERO #  SHRI.SUNDAR PICHAI

PNG for#2. Card Designers

                     INVITATION CARDS DOWNLOAD HERE! #1.card👇                                                                              ...